நியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை

பொதுவாக சீன புத்தாண்டு தினத்தில், சீன மக்கள் வெடி சத்தங்களுடன் சிவப்பு நிற ரிப்பன் மற்றும் பேனர், மேள தாளங்களின் முழக்கம் என கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை பார்த்திருப்பீர்கள். இந்த இந்த வசந்த கால பண்டிகை சம்பிரதாயத்திற்கு பின்னால் ஒரு கதை உள்ளது.

முன்பொரு காலத்தில் சீன நாட்டில் ‘நியான்’ என்ற ஒரு அரக்கன் இருந்தானாம். ஒவ்வொரு சந்திர மாதத்தின் முதல் நாளில் கிராமத்திற்குள் புகுந்து மக்களை வேட்டையாடி செல்வதை வழக்கமாக வைத்திருந்தானாம். இதனால் இந்த அரக்கனை பற்றிய கவலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லயாம்.

இப்படியிருக்க ஒரு நாள் இந்த அரக்கனுக்கு சிவப்பு நிறத்தை கண்டால் பயம் என தெரிய வந்தது கிராமத்து வாசிகளுக்கு. மேலும் கடும் முழக்கங்களும் இந்த அரக்கனுக்கு பயத்தை கொடுக்கும் என்பதை தற்செயலாக அறியவந்தனர். அவன் வரும் பொழுதிற்காக காத்திருந்து சிவப்பு நிற பேனர்களையும், கடும் மேள தாளங்களையும் கொண்டு விரட்டி அடித்தனர். பயத்தில் தெறித்து ஓடிய அந்த அரக்கன் அந்த கிராமத்திற்கு அதன் பின்னர் வரவே இல்லயாம். இந்த நாளை தான் ‘நியான் திருநாள்’ என ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர்.

சிவப்பு நிறங்களுடன் மேல தாள சத்தங்களை வைத்து கொண்டாடும் போது அதை கண்டு வாழ்வில் உள்ள அனைத்து தீய சக்திகளும் நம்மை விட்டு ஓடிவிடும் என்ற நம்பிக்கை சீனர்களுக்கு இன்றும் உள்ளது.

Share This: