ஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்

சீனாவின் ஷாங்காய் நகரில் இயங்கி வரும் ‘ஷாங்காய் மேகிளவ்’ ரயிலே உலகின் தற்போதய அதிவேக ரயிலாக அறியப்படுகிறது. அதிகபட்சமாக 431 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. 574 பயணிகள் பயணிக்கத்தக்கதான இந்த ரயில் ஷாங்காய் நகரின் ‘புடோங் சர்வதேச விமான நிலையம்’ மற்றும் ஷாங்காய் நகரின் மையப்பகுதியை இணைக்கும் தடத்தில் சேவை செய்து வருகிறது.

30.5கிலோமீட்டர் இயங்கும் இந்த ரயில் இதன் பயண தொலைவை 7நிமிடம் 20 வினாடிகளில் கடக்கிறது. 2004ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள் இந்த சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

காந்த புல கொள்கையை அடிப்படையாக கொண்டு இயங்குவதால் இந்த ரயில் தண்டவாளத்துடன் உராய்வதில்லை. இதன் மூலம் அதிவேகமாக இதனால் இயங்க முடியும். இந்த தொழில்நுட்பம் ஜெர்மனி நாட்டின் சீமன்ஸ் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது.

ஜெர்மனி நாட்டில் இதனை ‘ட்ரான்ஸ்ராபிட்’ என அழைக்கின்றனர். ஜெர்மனி நாட்டின் கண்டுபிடிப்பாக இருந்தாலும் இன்றளவும் அங்கு ஒரு சோதனை ரயிலாகவே இருக்கிறது.

ஜப்பான் நாட்டிலும் இதே தொழில்நுட்பத்தில் உள்ள ரயில் சோதனை ஓட்டம் ஒன்றில் 603கிலோமீட்டர் வேகத்தில் சென்று சாதனை படைத்தது. ஆனால் அது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்னும் திறக்கப்படவில்லை.

Share This: