உலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ என்பதாகும். இதை ஜப்பானை சேர்ந்த ‘சுமிட்டோமோ ஹெவி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம் 1974 – 1979 ஆண்டுகளுக்கிடையில் கட்டியது. இது முதன் முதலில் கட்டப்பட்ட பொழுதில் ‘சீ வைஸ் ஜெயண்ட்’ என பெயரிடப்பட்டது. பின்னர் பல நிறுவனங்களுக்கு இது கை மாறியதால் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.
இந்த கப்பலின் நீளம் 458 மீட்டர். முழுமையாக சரக்கு நிரப்பப்பட்ட போது இதன் எடை 6,57,019 டன்களாகும். கப்பலின் எடை கழித்து சரக்குகளின் எடை 5,64,650 டன்களாகும். இது தான் இன்று வரை ஒரு கப்பலில் எடுத்து செல்லப்பட்ட அதிகபட்ச எடையாகும்.
1991 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரான் – ஈராக் நாடுகளுக்கிடையிலான போரின் போது ஈரான் நாட்டின் ராணுவ விமானம் ஒன்று குண்டுகளால் தாக்கியதில் நடு கடலில் மூழ்கியது. பின்னர் இதை சரிசெய்து 2009ஆம் ஆண்டு வரை பயன்படுத்தி வந்தனர்.
2009 ஆம் ஆண்டு வரை உபயோகத்தில் இருந்த இந்த கப்பலில் நிறைய பழுதுகள் தொடர்ந்து ஏற்பட்டதால் இந்தியாவின் குஜராத்திலுள்ள ‘பிரியா ப்ளூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டு உடைக்கப்பட்டது.