அமெரிக்க நிறுவனமான ‘ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் க்ரூஸிஸ்’ க்கு சொந்தமான ‘எம் எஸ் எம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ்’ என்ற பயணிகள் கப்பலே உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலாக அறியப்படுகிறது. இந்த கப்பல் பிரான்ஸ் நாட்டின் ‘செயின்ட் நசயர்’ என்ற இடத்தில் அமைந்துள்ள ‘சான்டிர்ஸ் டீ அட்லான்டிகு’ என்ற கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது.
2016ம் ஆண்டு மே மாதம் 29ம் நாள் முதல் பயணத்தை மேற்கொண்ட இந்த கப்பலில் மொத்தம் 18 மாடிகள் உள்ளன. மொத்தமாக 2,747 அறைகள் உள்ள இந்த கப்பலில் 5,479 முதல் 6,780 நபர்கள் பயணிக்க முடியும். இவர்களை கவனித்துக்கொள்ள 2300பேர் இந்த கப்பலில் வேலை செய்கின்றனர்.
362 மீட்டர் நீளமுடையது. மொத்த எடை 2,26,963 டன்கள். 4 நீச்சல் குளங்கள் அமைந்துள்ளன. 20 சாப்பாடு தளங்களும், 2 தியேட்டர்களும், ஸ்பா, உடற்பயிற்சி மையங்கள், கூடை பந்து மைதானம், கோல்ப் விளையாட்டுத்தளம், பூங்காக்கள், நீர்சறுக்கு விளையாட்டுகள், கேசினோ ராயல் என எல்லா வசதிகளும் இந்த கப்பலில் உள்ளன.