உலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ஜெர்மனி நாட்டிலுள்ள ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’ எனப்படும் தீம் பார்க்கில் அமைந்துள்ளது. இது ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினிலிருந்து 60கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த பார்க்கின் சிறப்பம்சம் என்னவெனில் இந்த தீம் பார்க் இரண்டாம் உலகப்போரின் போது உபயோகப்படுத்தப்பட்ட விமானங்களின் பகுதிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஹேங்கர் மூலம் கட்டப்பட்டது. உலகின் மிகப்பெரிய மண்டபமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தீம் பார்க்கில் தூண்கள் எங்கும் கிடையாது என்பது சிறப்பம்சம்.
2003 ஆம் ஆண்டு மலேசியாவை சேர்ந்த ‘டஞ்சோங்’ என்ற நிறுவனம் இந்த தீம் பார்க்கை வடிவமைத்தது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இது பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. முழுமையாக மேற்கூரை மூடப்பட்டுள்ளதால், கடும் குளிர் காலங்களிலும் இங்கு எந்த பாதிப்பும் இல்லை.
50,000 திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் செடி கொடிகளை கொண்ட இந்த தீம் பார்க்கில் கடலில் உள்ள பவளப்பாறைகள் போன்ற வடிவமைப்புகள், சிறு குளங்கள், கிராமங்கள் போன்ற வடிவமைப்புகள் என பல உள்ளன. 24 மணி நேரமும் செயல்படும் இந்த தீம் பார்க்கில் 500 மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிகின்றனர்.