டென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்

விண்வெளிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் மனிதன் ‘டென்னிஸ் அந்தோணி டிட்டோ’ என்ற அமெரிக்க தொழிலதிபர். இந்த சுற்றுலாவிற்காக இவர் செலவு செய்தது 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 134 கோடி).

டென்னிஸ் 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் நாள் அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் பிறந்தார். சிறு வயது முதலே விண்வெளி பற்றிய ஆர்வம் கொண்ட டென்னிஸ் தனது கல்வியையும் அந்த துறையிலேயே தொடர்ந்தார்.

முதலில் இவரை விண்வெளிக்கு செல்ல தயார்படுத்த அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மறுப்பு தெரிவித்தது. பின்னர் ‘ஸ்பேஸ் அட்வென்சர்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் முயற்சியால் ‘மிட் கார்ப்’ ஸ்பேஸ் ப்ரோக்ராமில் சேர்க்கப்பட்டார்.

‘சோயுஸ் TM – 32’ என்ற மிஷன் மூலமாக 2001 ஆம் ஆண்டு விண்வெளிக்கு சென்றார். விண்வெளியில் 7 நாட்கள் 22 மணி நேரம் மற்றும் 4 நிமிடங்கள் செலவிட்டார்.

Share This: