பாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்

bhakti yadav

டாக்டர் பாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளித்து வரும் இந்திய பெண் மருத்துவர். மகப்பேறு மருத்துவராகிய இவர் 1948ம் ஆண்டு முதல் இந்த சேவையை செய்து வருகிறார். இந்தியாவின் ‘மத்திய பிரதேசம்’ மாநிலத்தில் உள்ள ‘இன்டோர்’ ( Indore ) நகரில் வசிக்கும் இவர் இந்த நகரின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

கடைசி மூச்சு உள்ளவரை மருத்துவ சேவை செய்வதென்று வாழும் இவரின் வயது தற்போது 91. இன்றும் ஓய்வில்லாமல் மருத்துவ சேவை புரிந்து வருகிறார்.

பணத்திற்காக மருத்துவத்தினை தொழிலாக செய்யும் இன்றைய காலகட்டத்திலும், மருத்துவத்தை சேவையாக செய்யும் இவரை போன்ற மருத்துவர்கள் தெய்வங்களே !

Share This: