ஜப்பான் நாட்டை சேர்ந்த மலை ஏறும் வீரர் ‘ஜூங்கோ தபெய்’, எவரெஸ்ட் மலை சிகரத்தை ஏறி தொட்ட முதல் பெண் வீரராக அறியப்படுகிறார். எவரெஸ்ட் மட்டுமல்லாது உலகின் பல மலைகளை ஏறி சிகரம் தொட்டவர் இந்த பெண்மணி.
1939ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் நாள் ஜப்பானின் ‘பிக்குஷிமா’ என்ற இடத்தில் பிறந்தார். ஷோவா பெண்கள் பல்கலைக்கழகத்தில் இணைந்து ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். படிக்கும் வயதிலேயே மலை ஏறும் ஆர்வமிகுதியால் அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டார்.
முதலில் ஜப்பானின் ‘பிஜி’ மலையை ஏறி பயிற்சி பெற்றார். பின்னர் சுவிட்சர்லாண்டில் உள்ள ஆல்ப்ஸ் மலையினை ஏறினார்.
1975ம் ஆண்டு மே மாதம் 16ம் நாள் இமய மலையின் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, இந்த சாதனையை செய்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.
எவரெஸ்ட் சிகரம் தொட இவர் தேர்வு செய்த பாதை ‘தென்கிழக்கு ரிட்ஜ் பாதை’. இவர் ஏரிய பொழுது பனிச்சரிவு ஏற்பட்டு மயக்க நிலைக்கு தள்ளப்பட்டார். உள்ளூர் நபர்களின் உதவியுடன் மீண்டும் மலையேற்றத்தை தொடர்ந்தார். அதன் பின்னர் 12 நாட்கள் தொடர்ந்து ஏறிய அவர் சிகரத்தை அடைந்தார்.
பின்னர் 1969ம் ஆண்டு ஜப்பானில் ‘LCC’ என அழைக்கப்படும் பெண்களுக்கான மலையேறும் கிளப் ஒன்றை நிறுவினார்.