இந்திய நாட்டின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியாச்சின் பனிமலை தான் உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள போர்க்களமாக அறியப்படுகிறது. இந்திய பாகிஸ்தான் எல்லைகள் சந்திக்கும் இந்த பனிமலை -50C வரை உறையக்கூடிய கடும் குளிர் பிரதேசமாகும். சுமார் 76 கிலோமீட்டர்கள் நீளமுடைய இந்த எல்லை கோட்டை ஊடுருவல் இல்லாமல் பாதுகாக்கும் பொருட்டு இங்கு ராணுவ வீரர்கள் எப்போதும் பணியில் இருப்பர்.
சியாச்சின் என்றால் காட்டுப்பூக்களின் இடம் என்று பொருள். கடல் மட்டத்திலிருந்து 5400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த பனிமலை உலகின் மிகப்பெரிய பனிமலைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்திய ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடம் 1984 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கடும் குளிர், பனிச்சரிவுகள் மூலம் சுமார் 800 வீரர்களின் உயிரை பறித்துள்ளது. கடும் முயற்சி மூலம் சாலைகள் அமைத்து இந்த இடத்தை பாதுகாத்து இந்திய ராணுவம்.
இந்திய ராணுவம் மட்டுமல்லாது பாகிஸ்தான் ராணுவமும் இந்த எல்லை கோடு பகுதியில் பல உயிர்களை இழந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு நடந்த பனிச்சரிவில் பாகிஸ்தான் வீரர்கள் 129 பேர் இறந்தனர்.
அப்துல் கலாம் அவர்கள் குடியரசு தலைவராக பணியாற்றிய 2011 ஆம் ஆண்டு இந்த போர் முனையை நேரில் சென்று பார்வையிட்டார்.