உலகம் முழுவதும் 2.3 மில்லியன் பணியாளர்களை கொண்ட வால்மார்ட் நிறுவனம், உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளியாக அறியப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 11,500 கிளைகளை கொண்ட வால்மார்ட் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 482 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனமும் இது தான்.
அமெரிக்காவின் ‘ஆர்கன்சாஸ்’ மாகாணத்தின் ‘ரோஜர்ஸ்’ என்ற நகரில், 1962ம் ஆண்டு ‘சாம் வால்டன்’ என்பவரால் இந்த நிறுவனம் துவங்கப்பட்டது. இன்று உலகின் 28 நாடுகளில் கிளைகளை கொண்டுள்ளது.
அமெரிக்காவின் 60% மளிகை வியாபாரங்கள் இந்த நிறுவனத்தின் வாயிலாகவே நடக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் இந்த நிறுவனம் 1.4 மில்லியன் பணியாளர்களை கொண்டுள்ளது. வால்டன் குடும்பத்தை சேர்ந்தவர்களால் நடத்தப்படுகிறது.